தூத்துக்குடியில், வருகிற 6-ந் தேதிபோலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வு
தூத்துக்குடியில், வருகிற 6-ந் தேதிபோலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வு நடக்கிறது. இப்பணிக்கான ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வு வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. இத்தேர்வுக்கான ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.
உடல் தகுதி தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2022-ம் ஆண்டுக்கான போலீஸ் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு கடந்த 27.11.2022 அன்று எழுத்து தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்று தகுதியானவர்களுக்கு உடற்தகுதி தேர்வு வருகிற 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
இதனை தொடர்ந்து உடற்தகுதி தேர்வு நடைபெற உள்ள விளையாட்டு அரங்கில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின் போது, தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரி குமார், அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரியப்பன், செல்வக்குமார், ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டடர் மணிகண்டன் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.