பேரிடர் காலத்தில் தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்றுவது எப்படி? பெருந்துறை தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம்
பேரிடர் காலத்தில் தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்து பெருந்துறை தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனா்.
ஈரோடு
பெருந்துறை
வெள்ளப்பெருக்கு, நீரில் அடித்து செல்லுதல் முதலான பேரிடர் நேரத்தில சிக்கியவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும்? என்பது குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி பெருந்துறையை அடுத்த வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமை தாங்கினார். இதில் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டு தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்றுவது எப்படி என்பதை பல்வேறு செயல்விளக்கங்கள் மூலம் செய்து காட்டினர்.
இந்த நிகழ்ச்சியை கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் என பலரும் கண்டு ரசித்தனர்.
Related Tags :
Next Story