திங்களூரில்10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
திங்களூரில் 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்டாா்.
திங்களூரில் 10-ம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
10-ம் வகுப்பு மாணவர்
பெருந்துறை அருகே உள்ள திங்களூர் நிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். விவசாயி. இவருடைய மகன் நகுல் (வயது 14). இவர் வெள்ளாங்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நகுல் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் ரமேஷ் நகுலை அழைத்து நன்றாக படிக்க வேண்டும் என்று கூறி கண்டித்ததாக தெரிகிறது.
விஷம் குடித்தார்
இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்த நகுல் பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டதாக தெரிகிறது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நகுல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.