திங்களூரில் 205 பேருக்கு வீட்டுமனை பட்டா


திங்களூரில் 205 பேருக்கு வீட்டுமனை பட்டா
x
தினத்தந்தி 22 Oct 2023 4:48 AM IST (Updated: 22 Oct 2023 4:49 AM IST)
t-max-icont-min-icon

திங்களூரில் 205 பேருக்கு வீட்டுமனை பட்டா அளிக்கப்பட்டது

ஈரோடு

பெருந்துறை அருகே திங்களூரில் உள்ள ஒரு மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், வீடு இல்லாத வெட்டயன்கிணறு ஊராட்சியைச் சேர்ந்த 205 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார்.

பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் கே.பி.சாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு, 205 பேருக்கு வீட்டுமனை பட்டாவை வழங்கினார். தொடர்ந்து அரசுப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பெருந்துறை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பால் சின்னச்சாமி, ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் பாலசுப்ரமணி, மாவட்ட உதயநிதி நற்பணி மன்ற துணைத் தலைவர் எம்.குணசேகரன், பெருந்துறை ஊராட்சி ஒன்றியக்குழு கவுன்சிலர் செந்தில்குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் வீ.சி. தங்கவேல், பெருந்துறை தெற்கு ஒன்றிய மருத்துவர் அணி துணை அமைப்பாளர் எல்.ஐ.சி. பாலாஜி, ஈரோடு தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் டி.நித்தியானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story