திருச்செந்தூரில்ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


திருச்செந்தூரில்ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Aug 2023 12:15 AM IST (Updated: 29 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அய்யாகுட்டி தலைமை தாங்கினார். வட்ட தலைவர் பாலசிங் பாண்டியன் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சிவஆழ்வார் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், திருச்செந்தூர் வட்ட செயலாளர் மணியன், பொருளாளர் கல்யாணி, இணை செயலாளர் ஞானேந்திர பிரகாஷ், ஸ்ரீவைகுண்டம் வட்ட செயலாளர் அப்துல் ஜாபர், சாத்தான்குளம் வட்ட செயலாளர் சுப்பையா, பொருளாளர் பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணை தலைவர் பிரேம்குமார் நன்றி கூறினார்.


Next Story