திருச்செந்தூரில்சிவந்தி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது


திருச்செந்தூரில்சிவந்தி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது
x
தினத்தந்தி 20 Sept 2023 12:15 AM IST (Updated: 20 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் சிவந்தி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் சிவந்தி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது.

சிவந்தி கோப்பை கிரிக்கெட்

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் 17-வது சிவந்தி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது.

தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் சாம்ராஜ் வரவேற்று பேசினார். ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, வ.உ.சி. கல்லூரி, நெல்லை பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரி, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி, எஸ்.டி. இந்து கல்லூரி ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற அணிகள்

முதல் போட்டியில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியும், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியும் மோதின. இதில் வ.உ.சி. கல்லூரி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியும், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியும் விளையாடியது. ஆதித்தனார் கல்லூரி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3-வது போட்டியில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியும், பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரியும் மோதியதில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4-வது ஆட்டத்தில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியும், நாகர்கோவில் எஸ்.டி. இந்து கல்லூரியும் விளையாடியது. இதில் 23 ரன்கள் வித்தியாசத்தில் எஸ்.டி. இந்து கல்லூரி வெற்றி பெற்றது.

இன்று அரைஇறுதிபோட்டி

முதல் மற்றும் 2-வது அரையிறுதி பேட்டிகள் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.


Next Story