திருவள்ளூரில் 5,548 பேர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதுகின்றனர்


திருவள்ளூரில் 5,548 பேர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதுகின்றனர்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 5,548 பேர் எழுதுகின்றனர்.

திருவள்ளூர்,

தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 548 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இந்தத் தேர்வில் திருப்பாசசூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 1,309 ஆண்கள் மட்டும் தேர்வு எழுதுகின்றனர். காக்களூர் சிசிசி இந்து மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 1,300 பேரும், திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியில் 1,300 பேரும், பாண்டூர் இந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 700 பேரும், திருத்தணி ஜிஆர்டி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 939 பெண்கள் மட்டும் தேர்வு எழுதுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 5 மையங்களில் மொத்தம் 4,609 ஆண்களும், 939 பெண்களும் என 5 ஆயிரத்து 548 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இந்த தேர்வு எழுதும் நபர்கள் கை பை, புத்தகங்கள், செல்போன் மற்றும் செல்போன், கால்குலேட்டர், ப்ளுடூத் போன்ற மின்சாதன பொருட்கள் தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு சோதனைக்குப் பின்னரே தேர்வு எழுதும் நம்பர்களை உள்ள அனுமதித்தனர்.

இந்த உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு கண்காணிக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பகேர்லா செபாஸ் கல்யாண் தலைமையில் 1 கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட், 4 துணை போலீஸ் சூப்பிரண்டு, 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 532 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story