திருவாரூரில், வர்த்தகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில், வர்த்தகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

திருவாரூரில், வர்த்தகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்

மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, கோவில் இடங்களில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு புதிதாக வாடகை உயர்வு ஆகியவற்றால் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மின் கட்டணம், சொத்து வரி, கோவில் இட வாடகை உயர்வு போன்றவற்றை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் குமரேசன், துணைத்தலைவர்கள் பாலசுப்பிரமணியன், முகமதுரியாஸ், செயலாளர்கள் அண்ணாதுரை, ஜமால் முகமது, கண்ணன், பொருளாளர் செல்வராஜ், செய்தி தொடர்பாளர் விஜயானந்தம், வர்த்தகர் சங்க தலைவர் அருள், காய்கனி சங்கத்தை சேர்ந்த மகேஷ், நாளங்காடி சங்கத்தை சேர்ந்த ஜெயகுமார் மற்றும் நகை கடை உரிமையாளர்கள் சங்கம், ஆபரண தொழிலாளர்கள் சங்கம், சிறு-குறு தொழில் சங்கம், நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story