தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திலுள்ள3 சட்டமன்ற தொகுதியிலும் புதிதாக1½ லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்


தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திலுள்ள3 சட்டமன்ற தொகுதியிலும் புதிதாக1½ லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திலுள்ள 3 சட்டமன்ற தொகுதியிலும் புதிதாக 1½ லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திலுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் ஜூன் 3-ந்தேதிக்குள் ஒன்றரை லட்சம் உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தி.மு.க. செயற்குழு கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். தொகுதி பார்வையாளர்கள் செல்லப்பா, டாக்டர் சபி, முதுகுளத்தூர் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தெற்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கி பேசியதாவது:-

கட்சி தலைவரின் உத்தரவிற்கு ஏற்ப தெற்கு மாவட்டத்திலுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, வார்டுகள், ஊராட்சிகள் அடிப்படையில் புதிய உறுப்பினர்களை சேர்க்கவேண்டும்.

தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்கள் வீதம் ஒன்றரை லட்சம் உறுப்பினர்களை கட்சி நிர்வாகிகள் சேர்க்கவேண்டும். அவர்கள் புதிய உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இதற்காகவும் பல்வேறு பணிகளுக்காகவும் தொகுதிக்கு ஒரு பார்வையாளரை தலைவர் அறிவித்து உள்ளார். அவர்கள் இப்பணிகளை ஆய்வு செய்வார்கள். இதுதவிர ஒன்றியம் வாரியாக கண்காணிப்பு குழு அமைக்கப்படும். ஏப்ரல் 3-ந்தேதி முதல், ஜூன் 3-ந்தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கை பணிகளை முடிக்கவேண்டும்.

இதேபோல் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை ஆண்டுமுழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஜூன் 3-ந் தேதி திருவாரூரில் நடைபெறும் நூற்றாண்டு தொடக்க விழாவில் தெற்கு மாவட்டத்தில் இருந்து அதிகளவில் தொண்டர்கள் கலந்துகொள்ளவேண்டும்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதற்கு படிவங்கள் வந்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கவேண்டும் என்று பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில், கூட்டுறவு சங்க தலைவர் உமரிசங்கர், மாவட்ட துணை செயலாளர்ஆறுமுகபெருமாள், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் பார்த்திபன், பாலசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்

1 More update

Next Story