தூத்துக்குடியில், வியாழக்கிழமை அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில், வியாழக்கிழமை அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி டூவிபுரத்திலுள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பிரச்சினைகளை கண்டுகொள்ளாத தி.மு.க. அரசை கண்டித்து முன்னாள் முதல்-அமைச்சரும், அ.திமு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி இன்று (வியாழக்கிழமை) தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தமுடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹென்றி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story