தூத்துக்குடியில் மினிவேனில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


தூத்துக்குடியில் மினிவேனில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 July 2023 12:15 AM IST (Updated: 13 July 2023 4:32 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மினிவேனில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் நேற்று மினிவேனில் ரேஷன் அரசி கடத்திய 2 பேரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் அனுராதா, சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் மற்றும் போலீசார் நேற்று தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூர் பாண்டியாபுரம் டோல் கேட் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த ஆம்னி வேனை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் தலா 40 கிலோ எடை கொண்ட 20 மூடைகளில் சுமார் 800 கிலோ ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன. அவை கடத்தி செல்லப்பட்டதும் தெரிய வந்தது.

இரண்டு பேர் கைது

இதுகுறித்து குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மினிவேனை ஓட்டி வந்த தபால் தந்தி காலனியைச் சேர்ந்த காந்தி சங்கர் (33) மற்றும் அவருடன் வந்த விழுப்புரம் மாவட்டம் வசந்தபுரத்தை சேர்ந்த முனியாண்டி (27) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அந்த வேனில் இருந்த சுமார் 800 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளையும் போலீார் பறிமுதல் செய்தனர். இந்த ரேஷன் அரிசி மூட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன? எங்கு கொண்டு செல்லப்பட்டன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story