தூத்துக்குடியில்நண்பனை தாக்கிய 2 வாலிபர்கள் கைது


தூத்துக்குடியில்நண்பனை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நண்பனை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் நடராஜன் (வயது 25). இவரது சகோதரி வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த போது, நண்பர்கள் தூத்துக்குடி கே.வி.கே நகரை சேர்ந்த சாமுவேல் மகன் தவசிமணி (24), தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ் கண்ணன் (23) மற்றும் சிலர் நடனம் ஆடி உள்ளனர். அப்போது நடராஜனுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த தவசிமணி, சுரேஷ் கண்ணன் மற்றும் சிலர் சேர்ந்து நடராஜனை கடந்த 3-ந் தேதி மோட்டார் சைக்கிளில் நடராஜனை கடத்தி சென்று தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். பின்னர் அவரை வீட்டில் இறக்கி விட்டு சென்று விட்டனர்.

இது குறித்து நடராஜன் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து, தவசிமணி, சுரேஷ்கண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.


Next Story