தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் சிக்கினர்


தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் சிக்கினர்
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 3:03 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 4 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த நெல்லை கஞ்சா வியாபாரி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள் கடத்தல், விற்பனையை முற்றிலும் தடுப்பதற்காக மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பு தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பின்புறம் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த ரகுமத்துல்லாபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த அப்துல்கலாம் (25), சுல்தான்அலாவுதீன் (24) ஆகிய 2 பேரையும் பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்து இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி கே.டி.சி.நகரை சேர்ந்த ராம்குமாரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி இருப்பது தெரியவந்தது. இதனால் தனிப்படை போலீசார் ராம்குமாரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அவர் அளித்த தகவலின் பேரில் முத்தம்மாள்காலனியை சேர்ந்த யோகராஜ் (வயது 34) என்பவரை தனிப்படை போலீசார் பிடித்தனர். அவருக்கு நெல்லையை சேர்ந்த ஒருவர் கஞ்சாவை சப்ளை செய்து இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த கஞ்சா வியாபாரி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

கைது

இதனால் தனிப்படை போலீசார் யோகராஜ், ராம்குமார், அப்துல்கலாம், சுல்தான் அலாவுதீன் ஆகிய 4 பேரையும் கைது செய்து தூத்துக்குடி மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை போலீசில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா, ரூ.2 ஆயிரத்து 800 ரொக்கப்பணம், 4 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story