தூத்துக்குடியில்நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம்
தூத்துக்குடியில் நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி சில்வர்புரத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட பிரபு ரசிகர் மன்ற தலைவர் குமார முருகேசன், மண்டல தலைவர் சேகர், கவுன்சிலர் சந்திர போஸ், மாவட்டத் துணை தலைவர் பிரபாகரன், விஜயராஜ், மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், இலக்கியப் பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், வார்டு தலைவர் பொன்ராஜ், வேல் குமார், கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று, மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 22-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் காங்கிரஸ் சார்பாக மெயின் பஜாரில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்துக்கு நகர தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு உடன்குடி வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் ரஹ்மத்துல்லா முன்னிலை வகித்தார். இதில் காங்கிரஸ்கட்சியினர், சிவாஜி ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.