தூத்துக்குடியில்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா

தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு சுற்றுலா துறை சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா நடத்தப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிட பழங்குடியினர் பள்ளிகளில் படிக்கும் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், அருங்காட்சியகங்களுக்கு அழைத்து சென்று பார்வையிட செய்து, மாணவ- மாணவிகளிடையே சுற்றுலா தலங்களின் முக்கியத்துவம், வரலாறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் கொடியசைத்து சுற்றுலா வாகனத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மாணவ-மாணவிகள் ஆதிச்சநல்லூர் பகுதிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா உதவி அலுவலர் ந.நித்திய கல்யாணி மற்றும் அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலர் சி.திருவாசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாணயம் ஆகியோர் செய்திருந்தனர்.