தூத்துக்குடியில் உப்பு மூடை சுமை தொழிலாளர்களுக்கு போனஸ்: மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்


தூத்துக்குடியில்  உப்பு மூடை சுமை தொழிலாளர்களுக்கு போனஸ்: மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் உப்பு மூடை சுமை தொழிலாளர்களுக்கு போனஸை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க பொதுச்செயலாளரும், மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி 135 தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் நயினார், மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க கவுன்சில் தலைவர் சுசி.ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா மற்றும் உப்பள தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story