தூத்துக்குடியில்கந்தூரி விழா


தூத்துக்குடியில்கந்தூரி விழா
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-31T00:15:33+05:30)

தூத்துக்குடியில் கந்தூரி விழா நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பழமைவாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் முத்துநகர் மகான் ஷேகு நூஹீ ஒலி அப்பா தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு விழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதை தொடர்ந்து நேற்று அதிகாலையில் கந்தூரி விழா நடந்தது. இதற்காக தர்கா மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஜாமியா பள்ளிவாசல் இமாம் சதக்கத்துல்லா சிறப்பு துவா ஓதினார். அப்போது, அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பின்னர் அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது.


Next Story