தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டப்பட்டது.
தூத்துக்குடி பிரையண்ட்நகர் காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் ரத்ததான கழகம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது விழாவுக்கு மன்ற தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணி பிச்சை, நாடார் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், பிரதிநிதி பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் அந்தோணி சேவியர், அருள்ராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாநகர அவை தலைவர் மதியழகன், அரசு வக்கீல் பாலசுப்பிரமணியன், வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் தமிழ்நாடு காமராஜர் பேரவை மாநில செயலாளர் அழகு மந்திரி, காமராஜர் நற்பணி மன்ற பொன்ராஜ், தட்சிணாமூர்த்தி, செல்வா உள்பட பலர் கலந்து கொண்டனர்.