தூத்துக்குடியில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.140-க்கு எகிறியது


தூத்துக்குடியில் சின்ன வெங்காயம்  கிலோ ரூ.140-க்கு எகிறியது
x
தினத்தந்தி 28 July 2023 12:15 AM IST (Updated: 28 July 2023 5:17 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.140-க்கு எகிறி விற்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் மீண்டும் ரூ.140-க்கு எகிறி விற்பனை செய்யப்பட்டது. தக்காளி கிேலா ரூ.120-க்கு விற்கப்பட்டது.

சின்ன வெங்காயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபகாலமாக காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள் காய்கறிகள் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தூத்துக்குடி உழவர் சந்தையில் நேற்று முன்தினம் ரூ.90-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் நேற்று ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனையானது. அதே போன்று கடந்த சில நாட்களாக தக்காளி ஒருகிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கடந்த வாரத்தில் ரூ.140-க்கு விற்பனையான மிளகாய் விலை குறைந்து ரூ.80-க்கு விற்பனையானது.

விலை விவரம்

நேற்று ஒரு கிலோ பாகற்காய் ரூ.120-க்கும், மிளகாய் ரூ.80-க்கும், சின்ன வெங்காயம் ரூ.140-க்கும், பீன்ஸ் ரூ.90-க்கும், பட்டர் பீன்ஸ் ரூ.160-க்கும், இஞ்சி ரூ.280-க்கும், ஒரு கிலோ சாம்பல் பூசனி ரூ.15-க்கும், சுரைக்காய் ரூ.15-க்கும், கத்தரிக்காய் ரூ.30 முதல் ரூ.50-க்கும், அவரைக்காய் ரூ.50 முதல் ரூ.60-க்கும், கொத்தவரைக்காய் ரூ.50-க்கும், சேம்பு ரூ.60-க்கும், மல்லி ரூ.40-க்கும், முருங்கைக்காய் ரூ.50 முதல் ரூ.60 வரையும், சேனை ரூ.60-க்கும், பூண்டு ரூ.160 முதல் ரூ.180 வரையும், வெண்டைக்காய் ரூ.50-க்கும், மாங்காய் ரூ.30-க்கும், பல்லாரி ரூ.30-க்கும், வாழைக்காய் ரூ.35-க்கும், பூசணிக்காய் ரூ.25-க்கும், கருணைக்கிழங்கு ரூ.60-க்கும், பீர்க்கன்காய் ரூ.40-க்கும், புடலங்காய் ரூ.30-க்கும், முட்டைகோஸ் ரூ.35-க்கும், கேரட் ரூ.60-க்கும், காளி பிளவர் ரூ.50-க்கும், சவ்சவ் ரூ.35-க்கும், உருளைக்கிழங்கு ரூ.35-க்கும், முள்ளங்கி ரூ.30-க்கும் விற்பனையானது.


Next Story