தூத்துக்குடியில்அரசியல் கட்சியினர் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்


தூத்துக்குடியில்அரசியல் கட்சியினர் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2023 12:15 AM IST (Updated: 17 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பல்வேறு அரசியல் கட்சியினர் சுதந்திர தினவிழாவை முன்னிட்டி தேசியக்கொடி ஏற்றினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அரசியல் கட்சிகள் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

சுதந்திர தினவிழா

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய நாட்டின் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பலர் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றினர். அதே போன்று மாநகராட்சி சார்பில் தெருவிளக்குகளில் மூவர்ண ஒளி விளக்குகள் ஒளிரவிடப்பட்டு இருந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

காங்கிரஸ்

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சக்திவிநாயகர்புரத்தில் தேசிய கொடியை மாவட்ட செயலாளர் முரளிதரன் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வடக்கு மண்டல தலைவர் டி சேகர், மாநகர் மாவட்ட துணைத் தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன், சின்னக்காளை, ரஞ்சிதம், மாவட்ட பொதுச்செயலாளர் மைக்கிள், சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் மைதீன், இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் மெர்லின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாம் இந்தியர் கட்சி

நாம் இந்தியர் கட்சியின் மாநிலத் தலைவர் என்.பி.ராஜா அறிவுறுத்தலின் பேரில் புதுக்கோட்டையில் நாம் இந்தியர் கட்சி சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநில பொருளாளர் ஜெயகணேஷ் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில தொழிற்சங்க தலைவர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதசார்பற்ற ஜனதாதளம்

தூத்துக்குடி மாவட்ட மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநில துணைத்தலைவர் வக்கீல் எம்.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். விழாவை முன்னிட்டு 1-ம் கேட் காந்தி சிலை, மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி, காமராஜர், வ.உ.சி மற்றும் குரூஸ் பர்னாந்து உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம் மாவட்ட செயலாளர் ஏ.கே.பாபு, மாநகர தலைவர் எம்.கோமதிநாயகம், துணை தலைவர் வி.ராஜபெருமாள், செயலாளர் ஆர்.செல்வராஜ், துணை செயலாளர் சாஸ்தாவு, இளைஞரணி நிர்வாகிகள் சுயம்புலிங்கம், மணிகண்டன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story