உடன்குடி பகுதியில் சவரிமுடி தயாரிக்கும் பணி தீவிரம்


உடன்குடி பகுதியில்  சவரிமுடி தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

உடன்குடி பகுதியில் சவரிமுடி தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்து வரும் பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து பொதுமக்களிடம் காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்துவது வழக்கம். இந்த வகையில் பக்தர்கள் ராமன், லெட்சுமணன், சிவன், பார்வதி, லெட்சுமி, சரஸ்வதி, காளி, கருப்பசாமி, அட்டகாளி, கருங்காளி, சுடுகாட்டுகாளி, குறவன், குறத்தி, போலீஸ், திருடன், குரங்கு, என பல்வேறு வேடங்கள் அணிவர். இவ்வாறாக அணியும் வேடங்களில் ஏராளமானவர்கள் ஆங்காங்கே குடில் அமைத்தும், கடைகளிலும் வேடம் அணியும் பக்தர்களுக்கு தேவையான பொருட்களை தயாரித்து விற்பனை செய்வர். சில பக்தர்கள் முனிவர் வேடம் மற்றும் பக்தி சம்பந்தமான சுவாமி வேடங்களுக்கு தேவையான பொருட்கள் தயாரிப்பதிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக உடன்குடி பகுதியில் சவுரி டோப்பா முடிகள் தயாரிக்கும் பணியில் ஏராளனமானவர்கள் தற்காலிக குடில்கள் அமைத்து குடும்பத்துடன் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story