உதிரமாடன்குடியிருப்பில்தி.மு.க. அரசின் சாதனை விளக்க கூட்டம


உதிரமாடன்குடியிருப்பில்தி.மு.க. அரசின் சாதனை விளக்க கூட்டம
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உதிரமாடன்குடியிருப்பில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க கூட்டம நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி உடன்குடி அருகே உள்ள உதிரமாடன்குடியிருப்பில் தி.மு.க. இளைஞரணி சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. உடன்குடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முகமது நூர்பாய்ஸ் தலைமை தாங்கினார். உடன்குடி மேற்கு ஒன்றிய செயலாளரும், யூனியன் தலைவருமான பாலசிங் வரவேற்று பேசினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், உடன்குடி நகர செயலாளரும். பேரூராட்சி துணை தலைவருமான சந்தையடியூர் மால்ராஜேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் போடி காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். சேர்மராகவன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story