உத்தமபாளையம் பேரூராட்சியில்ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் அவதி
உத்தமபாளையம் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
தேனி
தேனி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் அதிக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சியாக உத்தமபாளையம் விளங்குகிறது. இங்கு மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பஸ் நிலைய பகுதி, தேரடி வீதி, பூக்கடை, கோட்டைமேடு கிராம சாவடி, பழைய தாலுகா அலுவலக முன்பகுதி ஆகிய இடங்களில் சாலையோரத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
குறிப்பாக கிராமச்சாவடி பகுதியில் கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்கள் செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பேரூராட்சிப் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story