வடலூரில் பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது


வடலூரில்  பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வடலூரில் பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது செய்யப்பட்டனா்.

கடலூர்

வடலூர்,

வடலூர் பகுதியில் சிலர் பொது இடத்தில் மதுஅருந்திவிட்டு பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆபத்தாரணபுரத்தில் 3 பேர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் நெய்வேலி 30-வது புது ஜோதி தெருவை சேர்ந்த கதிர்வேல் மகன் ஆனந்தகுமார்(வயது 22), சுப்பிரமணியன் மகன் பாண்டித்துரை(22), ரஜினிகாந்த் மகன் ராஜாங்கம்(19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story