வால்பாறையில் 1,202 முதியவர்கள் தேர்வு எழுதினார்கள்


வால்பாறையில் 1,202 முதியவர்கள் தேர்வு எழுதினார்கள்
x
தினத்தந்தி 21 March 2023 12:15 AM IST (Updated: 21 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் வால்பாறையில் 1,202 முதியவர்கள் தேர்வு எழுதினார்கள்.

கோயம்புத்தூர்

வால்பாறை

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் வால்பாறையில் 1,202 முதியவர்கள் தேர்வு எழுதினார்கள்.

முதியோர் கல்வி திட்டம்

வால்பாறை பகுதியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 93 மையங்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் (முதியோர் கல்வி) மூலம் 15 வயதிற்கு மேற்பட்ட எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு கல்வி அறிவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள 93 மையங்களில் முதியோர் கல்வி திட்டத்தில் கல்வி கற்று வரக்கூடிய 1,202 முதியவர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது.

புதிய அனுபவம்

இந்த எழுத்து தேர்வை அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜாராம் தலைமையில் ஆசிரியர் பயிற்றுனர்கள், தன்னார்வலர்கள் நடத்தினார்கள். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. இதில் முதியவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள். இதுகுறித்து அவர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

முதியவர் செல்வராஜ் கூறுகையில், 60 வயதில் தேர்வு எழுதிய அனுபவம் தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியையும், புதிய அனுபவத்தையும் கொடுத்தது. படிக்கும் வயதில் ஏன் படிக்காமல் போய்விட்டோம் என்று இப்போது வருந்துகிறோம். எங்களது பிள்ளைகள், பேரக்குழந்தைகளை கட்டாயம் படிக்க வைப்போம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.

தனி மதிப்பு

மூதாட்டி சேவகத்தி கூறும்போது, பெண் குழந்தைகளுக்கு கல்வி கட்டாயம் என்பதை இப்போது உணர்கிறேன். ஒரு படித்த பெண் என்று சொல்லும்போது அதற்கென தனி மதிப்பு உள்ளது. எனது காலம்தான், தேயிலை தோட்டத்தில் உழைத்து முடிந்து விட்டது. ஆனால் எனது குடும்பத்தில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளையும் கட்டாயம் படிக்க வைப்பேன். வகுப்பறையில் உட்கார்ந்து தேர்வு எழுதியது எனக்கு ஒரு விதமான புத்துணர்ச்சியையும், படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் இப்போது படிக்க முடியாதே என்று நினைத்து வருந்துகிறேன். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை படிக்க வைப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

1 More update

Next Story