வால்பாறையில் கூழாங்கல் ஆற்றின் அருகே வைக்கப்பட்டு இருந்த சிவலிங்க சிலையால் பரபரப்பு


வால்பாறையில் கூழாங்கல் ஆற்றின் அருகே வைக்கப்பட்டு இருந்த சிவலிங்க சிலையால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Sept 2023 1:00 AM IST (Updated: 4 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் கூழாங்கல் ஆற்றின் அருகே திட்டில் வைக்கப்பட்டு இருந்த சிவலிங்க சிலையால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் கூழாங்கல் ஆற்றின் அருகே திட்டில் வைக்கப்பட்டு இருந்த சிவலிங்க சிலையால் பரபரப்பு ஏற்பட்டது.

கூழாங்கல் ஆற்றில் சிவலிங்க சிலை

வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்றின் நடுவில் உள்ள திட்டில் கேட்பாரற்ற நிலையில் துணியால் சுற்றிய நிலையில் சிவலிங்க சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து வால்பாறை பொதுப் பணித் துறையின் நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் வால்பாறை போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அனைத்து மதத்தினரும் வந்து குளித்து மகிழ்ந்து செல்லும் சுற்றுலா தலமான கூழாங்கல் ஆற்றில் யார் இந்த சிலையை வைத்தார்கள் என்பது உடனடியாக தெரியவில்லை.

சிலையை அகற்றிய அதிகாரிகள்

சம்பவயிடத்திற்கு வந்த வால்பாறை தாசில்தார் அருள்முருகன் மற்றும் போலீசார் சிலையை யார் வைத்தார்கள் என்பது தெரியாத நிலையில் இந்த சிலையை வேறுயாரவது சேதப்படுத்தினாலோ அல்லது ஆற்றுத் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாலோ சட்டம் -ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடும். அதனால் சிவலிங்க சிலையை அப்புறப்படுத்தி தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த சிலையை யார் எதற்காக கூழாங்கல் ஆற்றில் வைத்தார்கள் என்பது குறித்து வால்பாறை போலீசார் கூழாங்கல் ஆற்றில் நடைபாதை கடைகள் நடத்தி வருபவர்கள் மற்றும் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story