வால்பாறையில் கூழாங்கல் ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்- தாவரவியல் பூங்காவை திறக்க கோரிக்கை


வால்பாறையில் கூழாங்கல் ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்-   தாவரவியல் பூங்காவை திறக்க கோரிக்கை
x

வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தாவரவியல் பூங்காவை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தாவரவியல் பூங்காவை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

வால்பாறை பகுதியில் சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க எந்தவிதமான சுற்றுலா தலங்களும் இல்லாத நிலையில் எப்போதும் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் செல்லக்கூடிய ஒரே இடம் கூழாங்கல் ஆறு மட்டும் தான் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வால்பாறை பகுதியில் சுற்றுலா தலங்களை அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வால்பாறை பி.ஏ.பி காலனி பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்காவின் அனைத்து பணிகளும் முடிவடைந்து பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்படாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளது.

வருகிற 13-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவுள்ள நிலையில் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிகஅளவில் வருவார்கள். அதன்படி கோவை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வந்தனர்.

பூங்காவை திறக்க ேகாரிக்கை

அவர்கள் இயற்கை அழகை ரசித்ததோடு, கூழாங்கல் ஆற்றில் குவிந்தனர். மேலும் அங்கு குளித்து மகிழ்ந்தனர். மேலும் வால்பாறையில் தாவரவியல் பூங்கா பணிகள் முடிந்தும், திறக்கப்படாமல் உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதனால் பூங்காவை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கினால் மட்டுமே அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அதன் மூலம் வால்பாறை பகுதியில் வியாபாரங்கள் அதிக அளவில் நடைபெறும். எனவே வால்பாறை பகுதியில் சுற்றுலா தலங்களை அதிகரிக்கவும், பணிகள் முழுமையாக முடிந்தும் திறக்கப்படாத நிலையில் இருந்து வரும் தாவரவியல் பூங்காவை உடனே பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்காக திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story