வேலூரில் அம்மன் வீதி உலா தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு


வேலூரில் அம்மன் வீதி உலா தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
x

வேலூரில் அம்மன் வீதி உலா தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே செல்லியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அன்று திருவிழா நடைபெறும். அதன்படி ஆடி மாதம் 3-ம் வெள்ளிக்கிழமையொட்டி நேற்று திருவிழா நடைபெற்றது. காலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் மாலையில் சாமி வீதி உலாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்காக சாமி அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் ஏற்றினர். அப்போது அங்கு வந்த ஒருதரப்பினர் வீதி உலா நடத்த எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தினர்.

இதனால் அங்கு இருதரப்பு இடையே மோதல் உருவாகும் சூழல் அமைந்தது. பின்னர் வீதி உலா நிறுத்தப்பட்டு சாமி மீண்டும் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சாமி வீதி உலா தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீதி உலா நிறுத்தப்பட்டுள்ளது என்றனர்.


Next Story