வேலூரில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


வேலூரில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 29 Jun 2022 7:27 PM IST (Updated: 29 Jun 2022 7:27 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்

வேலூரில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.ரூ.360 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, 30,423 பயனாளிகளுக்கு மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.

பின்னர் பேசிய முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ;

வேலூர் கோட்டையில் நடத்திய புரட்சி தான் சுதந்திர போருக்கு முதன்மையானது.வேலூர் என்பது விடுதலையின் அடையாளம்.அமைச்சர் துரைமுருகனின் மாவட்டம் என்பதால் இங்கு வருவதில் கூடுதல் மகிழ்ச்சி.என்னை தாங்கி நிற்கும் தூணாக உள்ளவர் துரைமுருகன்.என்னை இளைஞராக பார்த்த அவர் இன்று தலைவராக பார்க்கிறார்.என கூறினார்

முன்னதாக இன்று வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.53.13 லட்சம் செலவில், 9.25 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையத்தை மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story