விழுப்புரம் நகராட்சியில் 30-ந் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை அதிகாாி தகவல்
விழுப்புரம் நகராட்சியில் 30-ந் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அதிகாாி தொிவித்தாா்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 13.4.2023 தேதி முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டப்பிரிவின்படி சொத்து உரிமையாளர்கள், தங்களது 2023-24-ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் (அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்) ஊக்கத்தொகை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே, விழுப்புரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட 1 முதல் 42 வார்டுகளில் உள்ள சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்கள், 2023-24 முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை 30-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகையை பெற்று பயன்பெறலாம் என நகராட்சி சார்பில் அன்புடன் தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும் பொதுமக்கள் சிரமமின்றி சொத்து வரி செலுத்துவதற்கு ஏதுவாக வருகிற 30-ந் தேதி வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பழைய நகராட்சி அலுவலக கட்டிடம், புதிய நகராட்சி அலுவலக கட்டிடம் ஆகிய இடங்களில் நகராட்சி கணினி வசூல் மையம் செயல்படும். ஆகவே சொத்துவரி செலுத்த ஏதுவாக https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவும் விழுப்புரம் நகராட்சியை தேர்வு செய்து சொத்து வரி தொகையை உடனே செலுத்தவும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல் விழுப்புரம் நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.