தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் குஞ்சரபாண்டியன், மாவட்ட துணைத்தலைவர்கள் திருமால், கோபால், இணைச்செயலாளர்கள் சாமியாண்டி, ரேவதி, அனைத்து தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள், நியாய விலை கடை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அரசு அறிவித்த பயிர் கடன், நகைக்கடன், சுய உதவி குழுக்கடன் தள்ளுபடி தொகையை முழுமையாக வழங்க கோரியும், சங்க செயலாளர்களின் பொதுப்பணித்திறன் முறையாக செயல்படுத்த கோரியும், சங்க விவகார எல்லையில் செயல்படுத்த முடியாத சங்கங்கள் பணியாளர்களை பல்துறை ஆய்வு என்ற பெயரில் அச்சுறுத்தலையும், பி.ஓ.எஸ். கருவியில் இருமுறை பில் போடும் முறையை கைவிட வலியுறுத்தியும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் செய்தி தொடர்பாளர் பொற்செல்வன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.