மாவட்ட அறங்காவலர்கள் பதவியேற்பு


மாவட்ட அறங்காவலர்கள் பதவியேற்பு
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட அறங்காவலர்கள் பதவியேற்பு விழா நடந்தது

சிவகங்கை

சிவகங்கை

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக புவனேஸ்வரி, மற்றும் உறுப்பினர்களாக ஜெயமூர்த்தி, வெள்ளையன், கவுரி மற்றும் செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதையொட்டி அவர்கள் பதவியேற்பு விழா சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) பழனிக்குமார், உதவி ஆணையர் செல்வராஜ், முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சேங்கை மாறன், மணிமுத்து, சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story