புதுமைப்பெண் திட்ட தொடக்க விழா - சென்னை வந்தடைந்தார் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்


புதுமைப்பெண் திட்ட தொடக்க விழா - சென்னை வந்தடைந்தார் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்
x

டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்த டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆலந்தூர்,

தமிழக அரசு சார்பில் ஆசிரியர் தினமான நாளை 3 புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. 15 மாதிரி பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகள், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டமான புதுமைப்பெண் திட்டம் ஆகிய திட்டங்களின் தொடக்க விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக அரசு அழைப்பு விடுத்தது. இதையடுத்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் இருந்து விமானத்தில் இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாடு ஆம் ஆத்மி தலைவர் வசிகரன் உள்பட பலர் வரவேற்றனர். ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.


Next Story