இருணாப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிட திறப்பு விழா
இருணாப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடத்தை எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் திறந்து வைத்தனர்
இருணாப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடத்தை எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் திறந்து வைத்தனர்
திருப்பத்தூர் ஒன்றியம் இருணாப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கியது. இந்த நிதியின்கீழ் திருப்பத்தூர் ஆலங்காயம் ரோட்டில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்க்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சி.பரிமளா சத்யன் தலைமை தாங்கினார். அனைவரையும் சத்யன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக வாணியம்பாடி தொகுதி ஜி. செந்தில்குமார் எம்.எல்.ஏ, ஒன்றியக்குழு தலைவர் விஜியா அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி பேசினர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சதீஷ் கண்ணா நன்றி கூறினார்.