150 வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு தொடக்க விழா


150 வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு தொடக்க விழா
x

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் 150 வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு தொடக்க விழா நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

பாளையங்கோட்டை யூனியன் கீழநத்தம் ஊராட்சி கே.டி.சி நகர் பகுதி கற்பகநகர், தங்கம் காலனி பகுதிகளில் உள்ள 150 வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு 15-வது நிதிக்குழு மானியம் 2022-23 வரையறுக்கப்படாத நிதியில் இருந்து ரூபாய் 7.37 லட்சம் நிர்வாக அனுமதி பெறப்பட்டு நேற்று வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுப்பதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது.

விழாவில் கீழநத்தம் பஞ்சாயத்து தலைவர் அனுராதா ரவிமுருகன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் சுபாஷ், வார்டு உறுப்பினர் முருகேசன், பம்ப் ஆப்பரேட்டர் தண்டபாணி குமரன், தி.மு.க. ஒன்றிய ஆதிதிராவிடர் நலஅணி அமைப்பாளர் செல்லப்பா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story