செங்கல்பட்டு கோர்ட்டில் வக்கீல்கள் சங்க கட்டிடம் திறப்பு


செங்கல்பட்டு கோர்ட்டில் வக்கீல்கள் சங்க கட்டிடம் திறப்பு
x

செங்கல்பட்டு கோர்ட்டில் வக்கீல்கள் சங்க கட்டிடம் திறப்பு விழா சங்க தலைவர் தலைமையில் நடந்தது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு அட்வகேட் அசோஷியேஷன் சங்கத்திற்கு தனி அறை வேண்டும் என மாவட்ட நீதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில் இந்த சங்கத்திற்கு கோர்ட்டு வளாக முதல் மாடியில் இடம் ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து வங்கீல்கள் சங்க கட்டிடம் திறப்பு விழா சங்க தலைவர் சிவகுமார் தலைமையில் நடந்தது. செயலாளர் பாஸ்கர், பொருளாளர் குமார், துணை தலைவர் லதா முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வரதன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட நீதிபதி மாவிஸ் தீபிகா சுந்தரவதனா கலந்துக்கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி காயத்ரி, மாவட்ட மகிளா கோர்ட்டு நீதிபதி எழிலரசி, குடும்பநல கோர்ட்டு நீதிபதி மலர்விழி, மாவட்ட போக்சோ கோர்ட்டு நீதிபதி தமிழரசி, பிரதம சார்பு நீதிபதி அனுஷா, கூடுதல் சார்பு நீதிபதி தமிழ்செல்வி, மாவட்ட முன்சிப் நீதிபதி மஞ்சுளா, ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்- 1 ஆர்.ரீனா ஆகியோர் கலந்துக்கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

விழாவில் வக்கீல்கள் சக்ரபாணி, சங்கர்பாபு, அரசு வக்கில் என்.சதீஷ் பாபு, கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். சங்க கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு கலர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அந்த இடம் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.


Next Story