அரசு கல்லூரியில் தாவரவியல் மன்ற தொடக்க விழா


அரசு கல்லூரியில் தாவரவியல் மன்ற தொடக்க விழா
x

அரசு கல்லூரியில் தாவரவியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாவரவியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிவனேசன் தலைமை தாங்கினார். வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் சோமசுந்தரம் கலந்து கொண்டு, தாவரவியல் துறையில் நடைபெறும் ஆய்வுகள் மற்றும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார். விழாவையொட்டி மாணவர்களுக்கு சிறுதானியங்கள் குறித்து கட்டுரை, ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரி மாணவ-மாணவிகள், துறைத்தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தாவரவியல் துறை தலைவர் துரைசாமி நன்றி கூறினார்.


Next Story