பல் மருத்துவமனை திறப்பு விழா


பல் மருத்துவமனை திறப்பு விழா
x

திருப்பத்தூரில் பல் மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் ஆசிரியர் நகரில் உள்ள குங்குமம் மாளிகையில் மாவட்டத்திலேயே 3டி ஸ்கேனர் வசதியுடன் கூடிய அதிநவீன முறையில் ஸ்மைல் ஆர்ட் பல்மருத்துவமனை திறப்பு விழா இன்று நடந்தது.

விழாவுக்கு குங்குமம் ஜி.குமரேசன் தலைமை தாங்கினார். குங்குமம் ஜி.அசோகன், குங்குமம் ஜி.யுவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் பி.கே.தனஞ்ஜெயன், டி.கலைவாணி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

ஸ்மைல் ஆர்ட் பல் மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் புதிய ரக பற்கள் தயாரித்தும், கம்பிகள் இன்றி அழகான பற்கள் சீரமைத்தல், அதிநவீன வேர் சிகிச்சை, குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை, டிஜிட்டல் பல் மருத்துவ வசதி, கணினி முறையில் எக்ஸ்ரே போன்ற வசதிகளுடன் மாவட்டத்தில் முதல் முறையாக திறக்கப்பட்டுள்ளது என டாக்டர் தனஞ்ஜெயன் தெரிவித்தார்.

திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஜி.ரமேஷ், டி.கே.ராஜா, மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, கே.சி.அழகரி, முன்னாள் நகரமன்ற தலைவர் அரசு, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் கிருபாகரன், ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், டாக்டர் பிரபாகரன், ஏலகிரி செல்வம், கணேஷ்மல், எஸ்.பி.திருமலை, வக்கீல் எஸ்.எஸ்.மணியன், குட்டிமணி மற்றும் டாக்டர்கள், பல்வேறு கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story