ரூ.40 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா


ரூ.40 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா
x
தினத்தந்தி 13 Oct 2023 12:30 AM IST (Updated: 13 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ.40 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலங்குளம் ரோடு கீழ்பகுதியில் மழைநீர் வடிகால் கட்டுதல், கீரைத்தோட்டத்தெரு பெரியகுளம் கரை அருகில் சமுதாய கழிப்பிடம் அமைத்தல், கீரைத்தோட்ட வடக்கு தெரு பகுதியில் சேதமடைந்த வாறுகாலை சரி செய்து சிமெண்டு சாலை அமைத்தல் ஆகிய திட்டப்பணிகள் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. இப்பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை தாங்கி, புதிய பணிகளை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தா.தேவ அன்பு, ரா.விஜிராஜன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்அறிவழகன் மற்றும் ஆ.ராமசாமி, ரெ.ஜெகதீசன், பெ.வேலாயுதம், சா.தெய்வேந்திரன், கு.மதியழகன், ம.விஜயா, அறிவழகன், ஒப்பந்ததாரர் அண்ணாத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story