ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மன்றங்கள் தொடக்க விழா


ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மன்றங்கள் தொடக்க விழா
x

ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மன்றங்கள் தொடக்க விழா நடைபெற்றது.

கரூர்

ஜெகதாபி அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளியில் அனைத்து மன்றங்கள் தொடக்கவிழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் தீனதயாளன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆசிரியர் அன்னகுமார் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக கரூர் அரசு கலை கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் சுந்தரம் கலந்துகொண்டு தமிழ் மன்றம், ஆங்கில இலக்கிய மன்றம், கணித மன்றம், அறிவியல் மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், சமூக அறிவியல் மன்றம், தொண்மை பாரம்பரிய மன்றம், நுகர்வோர் மன்றம் ஆகிய மன்றங்களை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பின்னர் அனைத்து மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மன்றத்தின் நோக்கம், செயல்பாடு, மாணவர்களின் பங்கேற்பு குறித்து விளக்கினார்கள். தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் உதவி தலைமை ஆசிரியை கிரேஸ்மேரி நன்றி கூறினார். இந்த விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story