ராணிப்பேட்டை பகுதியில் 3 இடங்களில் கல்வெட்டு திறப்பு, காங்கிரஸ் கொடியேற்று விழா


ராணிப்பேட்டை பகுதியில் 3 இடங்களில் கல்வெட்டு திறப்பு, காங்கிரஸ் கொடியேற்று விழா
x
தினத்தந்தி 9 July 2023 12:31 AM IST (Updated: 9 July 2023 4:23 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை பகுதியில் 3 இடங்களில் கல்வெட்டு திறப்பு, காங்கிரஸ் கொடியேற்று விழா நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை பகுதியில் 3 இடங்களில் கல்வெட்டு திறப்பு, காங்கிரஸ் கொடியேற்று விழாநடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் புதிதாக இந்திரா காந்தி தொழிற்பேட்டையை காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்து கட்சி கொடியேற்றி வைத்தார். அவருக்கு தமிழக காங்கிரஸ் மாநில செயலாளர் அக்ராவரம் கே.பாஸ்கர் தலைமையில் பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சோளிங்கர் முனிரத்தினம் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் நகர தலைவர் ஆர்.கே.குப்புசாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்து கல்வெட்டினை திறந்து வைத்தார். அவருக்கு பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழங்க காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதே போல பூட்டுத்தாக்கு பகுதியில் காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை தலைமையில் கட்சி கொடியேற்றி கல்வெட்டு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கே.எஸ்.அழகிரிக்கு காங்கிரஸ் கட்சியினர் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கட்சி கொடியை ஏற்றி வைத்த அவர் கல்வெட்டினை திறந்து வைத்தார்.


Next Story