கே.ஏ.எஸ்.ராம்தாஸ் உருவச்சிலை, மணிமண்டபம் திறப்பு


கே.ஏ.எஸ்.ராம்தாஸ் உருவச்சிலை, மணிமண்டபம் திறப்பு
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தோப்புவளத்தில் கே.ஏ.எஸ்.ராம்தாஸ் உருவச்சிலை, மணிமண்டபம் திறப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே தோப்புவளத்தில் உள்ள கே.ஏ.எஸ்.ராம்தாஸ் கார்டனில், கே.ஏ.எஸ்.ராம்தாஸ் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மணிமண்டபம் மற்றும் அவரது உருவச்சிலை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் நடந்தது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், தொழில் அதிபர் ராம்குமார், தமிழ்நாடு பனைமர நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன், ஆறுமுகநேரி தொழில் அதிபர் எஸ்.தியாகராஜன், சமத்துவ மக்கள் கழக இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் நாராயணன், தொழில் அதிபர்கள் கனகலிங்கம், ஏ.செந்தூர்பாண்டியன், தோப்புவளம் ராஜா, ஸ்தபதி கணேசன், ராஜேசுவரி ராம்தாஸ், கே.ஏ.எஸ். சிவக்குமார் ராம்தாஸ், டாக்டர் புவனேசுவரி சிவக்குமார், தொழில் அதிபர் கே.ஏ.எஸ்.சரவணன் ராம்தாஸ், சசிதேவி சரவணன், சமத்துவ மக்கள் கழக துணை பொதுச் செயலாளர் கே.ஏ.எஸ்.ஆர்.பிரபு, சகிலா பிரபு, ஐகோர்ட்டு வக்கீல் கே.ஏ.எஸ்.அருண் ராம்தாஸ், கோமதி அருண், சஞ்ஜித் ராம்தாஸ், எஸ்.தருண் ராம்தாஸ், எஸ்.சுசித்ரா ராஜேசுவரி, எஸ்.சுதன் ராம்தாஸ், பி.ராகுல் ராம்தாஸ், பி.சுதீஷ் ராம்தாஸ், பி.பிரதிஷா ராஜேசுவரி, ஏ.ஆகாஷ் ராம்தாஸ், ஏ.லக்ஷிகா ராஜேசுவரி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story