அன்னைதெரசா மகளிர் மன்றம் தொடக்க விழா
திருக்கோவிலூர் கலை, அறிவியல் கல்லூரியில் அன்னைதெரசா மகளிர் மன்றம் தொடக்க விழா
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் கலை, அறிவியல் கல்லூரியில் அன்னை தெரசா மகளிர் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு கல்லூரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்ரமணியன், துணை தலைவர் முஷ்டாக்அகமது, பொருளாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் டாக்டர் ஜனசக்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். முன்னதாக திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையில் உள்ள இரட்டை விநாயகர் கோவில் அருகில் இருந்து மாணவிகள் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டு கல்லூரியை சென்றடைந்தனர். விழாவில் கல்லூரி அறக்கட்டளை குடும்பத்தினர் ராஜேஸ்வரி, சாந்தா, சாரம்மா, டாக்டர் நசீம்மாபேகம், சுமிதா, கிரிஜா ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. முடிவில் அன்னை தெரசா மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் அனுராதா நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை துணை முதல்வர் மீனாட்சி, நிர்வாக அலுவலர் ஹரிகரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.