புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா


புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா
x

நல்லவிநாயகபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே நல்ல விநாயகபுரம் ஊராட்சியில் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டது. இந்த வகுப்பறை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன் வரவேற்றார். ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து குத்து விளக்கு ஏற்றினார். இதில் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர்கள் செல்ல சேதுரவிக்குமார், மலர்விழி திருமாவளவன், ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் இளவரசு, ஒன்றியக்குழு துணை தலைவர் பானுசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி செயலாளர் சுமதி சுரேஷ் நன்றி கூறினார்.



Next Story