புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா


புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா
x

விக்கிரமசிங்கபுரத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. பணகுடி திருஇருதய பள்ளி தலைமை ஆசிரியர் கஷ்மீர் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் சுனில் பெஞ்சமின் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் அந்தோணிசாமி வரவேற்று பேசினார். ஞானதிரவியம் எம்.பி. புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார். நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் புதிய வகுப்பறையில் குத்துவிளக்கு ஏற்றினார். இதில் அம்பை யூனியன் தலைவர் பரணி சேகர், நகர செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story