புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா
மூலைக்கரைப்பட்டி அருகே புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
நாங்குநேரி யூனியன் மூலைக்கரைப்பட்டி அருகே சிந்தாமணி பஞ்சாயத்து கீழ சிந்தாமணியில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடந்தது. நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் தலைமை தாங்கி, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கினார். பின்னர் அங்கு 2 புதிய குடிநீர் தொட்டிகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். சிந்தாமணி பஞ்சாயத்து தலைவர் ஜேசு மிக்கேல், ஒன்றிய துணைச்செயலாளர் ஆசைமாறன், மாவட்ட பிரதிநிதி ராஜகண்ணு, கட்சி நிர்வாகிகள் மாடசாமி, பலவேசம், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story