பள்ளூரில் புதிய காவல் சோதனை சாவடி திறப்பு விழா


பள்ளூரில் புதிய காவல் சோதனை சாவடி திறப்பு விழா
x

பள்ளூரில் புதிய காவல் சோதனை சாவடியை ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த ராணிப்பேட்டை-காஞ்சீபுரம் மாவட்ட எல்லையான பள்ளுர் பகுதியில் புதிய காவல் சோதனை சாவடி திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி கலந்துகொண்டு, சோதனை சாவடியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதில் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிருஷ் அசோக், கலால் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிரஞ்சீவிலு, லோகேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரதாப் (பள்ளுர்), துலுக்கானம் (திருமால்பூர்), சிவ.மணிவண்ணன் (பின்னாவரம்) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story