புதிய ரேஷன் கடை திறப்பு விழா; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
கீழ அரியகுளத்தில் புதிய ரேஷன் கடையை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
இட்டமொழி:
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து நாங்குநேரியில் தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, காங்கிரஸ் கட்சி அழகியநம்பி, செல்லப்பாண்டியன், வட்டார தலைவர்கள் வாகைதுரை, ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நாங்குநேரி யூனியன் கீழ அரியகுளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதிநேர ரேஷன் கடையை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார். நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி வசந்தகுமார், ஒன்றிய கவுன்சிலர் செந்தூர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாங்குநேரி யூனியன் மன்னார்புரத்தில் வைத்து கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரையை எம்.எல்.ஏ. வரவேற்றார். மேலும் யாத்திரையில் கலந்து கொண்டவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.