ரூ.22 லட்சத்தில் புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு


ரூ.22 லட்சத்தில் புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
x

நாங்குநேரி அருகே ரூ.22 லட்சத்தில் புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் கரந்தாநேரி பஞ்சாயத்து முதலைகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.22 லட்சம் மதிப்பில் 2 புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கரந்தாநேரி பஞ்சாயத்து தலைவர் எஸ்.செந்தில்வேல் வரவேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார்.

விழாவில் நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி, யூனியன் துணைத்தலைவர் இசக்கிப்பாண்டி, மாவட்ட கல்வி அலுவலர் ரெஜினி, வட்டார கல்வி அலுவலர் சங்கீதா, பஞ்சாயத்து துணைத்தலைவர் எம்.சுதாகர், ஊராட்சி செயலர் சி.மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை விமலா நன்றி கூறினார்.


Next Story