ரூ.2.88 கோடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் திறப்பு
அம்பையில் ரூ.2.88 கோடியில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
அம்பை:
அம்பையில் ரூ.2.88 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. புதிய கட்டிடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதையடுத்து புதிய அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. யூனியன் சேர்மன் பரணி சேகர் தலைமை தாங்கினார். ஆணையாளர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்ட இயக்குனர் சுரேஷ், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், அம்பை நகர்மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன், மாவட்ட செயற்பொறியாளர் முருகன், உதவி திட்ட இயக்குனர் சந்திரசேகர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.
விழாவில் ஒன்றிய துணைத்தலைவர் ஞானக்கனி ஸ்டான்லி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகாஷ், கஸ்தூரி, சுடலைமுத்து, ராமலட்சுமி, இசக்கியம்மாள், சரஸ்வதி, மாரியம்மாள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், பணியாளர்கள், ஊராட்சி மன்ற செயலாளர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.